செவ்வாய், 21 ஜனவரி, 2014

பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்

         புவனேஷ்வரில்   பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்  சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில்  நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது .
26 -02-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் 
26-03-2014 அன்று தர்ணா போராட்டம் 
23-04-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
CMD அலுவலகம் நோக்கி பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
கோரிக்கைகள் :-
1.விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்து .
2. அரசாங்கத்தின்  உத்தரவு படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடு 
3. சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI /போனஸ் /கிராஜூவிட்டி  ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்து 
4. பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும் .
5.  சம வேலைக்கு சம ஊதியத்தை  ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிடு 
6  EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும் .
7.  வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும்  வழங்கிட வேண்டும் .
8. பழி   வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் .
9. பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்  சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக