திங்கள், 3 மார்ச், 2014

வரலாற்றில் இன்றுமார்ச் 3
 • 1575 - இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
 • 1857 - பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
 • 1878 - ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது.
 • 1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான்.
 • 1918 - முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.
 • 1923 - Henry Luce என்பவரும் Briton Hadden என்பவரும் இணைந்து நியூயார்க்கில் Time சஞ்சிகையின் முதல் பிரதியை வெளியிட்டனர்.
 • 1933 - ஜப்பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள்.
 • 1938 - சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
 •  1939 - மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
 • 1942 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் ஜப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.
 •  1943 - இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
 •  1945 - இரண்டாம் உலகப் போர்: முன்னர் நடுநிலையாக இருந்த பின்லாந்து அச்சு நாடுகளுக்கெதிராக போரை அறிவித்தது.
 • 1969 - நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது. 1971 - இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.
 • 1992 - பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
 • 2002 - சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக