வெள்ளி, 25 ஜூலை, 2014

கேடர் பெயர் மாற்றம்

e0 photo: spinning star1 spinstar_e0.gif
கேடர் பெயர் மாற்றத்திற்கான  கமிட்டியின் கூட்டம் (23-07-2014) அன்று  நடைபெற்றது . நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு ,நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி ,நமது துணை பொது செயலர் தோழர் .அனிமேஷ் மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர் . நிர்வாகத்தின் தரப்பில் கலந்து கொண்ட  திருமதி மது அரோரா மூத்த பொது மேலாளர் (மறு சீரமைப்பு ) கூறியதாவது . டெலிகாம் மெக்கானிக் மற்றும் RM கேடருக்கான பெயர் மாற்றத்தில் ஏற்கனவே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும் அதன் படி டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் டெலிகாம் டெக்னீசியன்  என்றும் RM ஊழியர்கள் டெலிகாம் உதவியாளர் (Telecom Assistant) என்றும் அழைக்கப்  படுவர். சீனியர் TOA மற்றும் TTA  கேடருக்கான பெயர்களை 
Sr. TOA------------- Telecom Office Associate என்றும்
TTAவை ------ Telecom Engineering Associate என்றும்  நிர்வாகம் முன்மொழிந்ததை நமது சங்கம் ஏற்று கொள்ளவில்லை   
Sr.TOA கேடரை டெலிகாம் அசோசியேட்  ஆபீசர் என்றும்
 TTA கேடரை ஜூனியர் இஞ்சினியர் என்றும் மாற்றம் செய்ய நமது BSNLEU சங்கம் வலியுறுத்தி உள்ளது .  இது விசயமாக  முடிவுகள் எட்டப்படவில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக