ஞாயிறு, 30 ஜூலை, 2017

அரசு ஊழியர் இயக்க முன்னோடி தோழர் ஆர்.முத்துசுந்தரம் காலமானார்தமிழக அரசு ஊழியர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.முத்துசுந்தரம் காலமானார். அவருக்கு வயது 66.சமீப மாதங்களாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஈரோடுமாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (29.7.2017) மாலை 6 மணி அளவில் மருத்துவ மனையிலேயே மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி அறிந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர் இயக்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் தோழர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த தோழர் ஆர்.முத்துசுந்தரம், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கல்வித்துறையில் அமைச்சுப் பணி ஊழியராக தனது அரசுப்பணி வாழ்க்கையை துவக்கினார். கல்வித் துறை ஆணையரின் தனிச்செயலாளர் பதவிவரை அரசுப் பணியில் உயர்ந்தார். 1978-80 காலக்கட்டத்தில் தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தை உருவாக்குவதற் காக பணியாற்றிய முன்னோடித் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர் தோழர்முத்துசுந்தரம். சங்கத்தை கட்டி அமைப்ப தற்காக மாநிலம் முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ஊழியர்களை அணி திரட்டியவர்.
தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தமிழக அரசு ஊழியர்களின் போரா ட்ட குணமிக்க தோழராக - அவர்களது அன்புக்குரிய தலைவராக உயர்ந்தவர். பின்னாட்களில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக, அகில இந்திய தலைவராக, அகில இந்திய கவுரவத் தலைவராக பொறுப்பு வகித்து, நாடு முழுவதும் அரசுஊழியர்களை அணிதிரட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் முத்துசுந்தரம்.அகில உலக தொழிற்சங்க சம்மேள னத்தின் தலைவர்களில் ஒருவராகவும் பரிணமித்தவர் அவர். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொழிற்சங்க சம்மேளன மாநாடுகளில் பங்கேற்றவர்.
கலை இலக்கியப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட முத்துசுந்தரம் சிறந்தபேச்சாளரும், அமைப்பாளரும் ஆவார் என்றும், அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும், தமிழகம் உள்பட அகில இந்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும், ‘‘தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகால மாக பணியாற்றி வழிகாட்டிய தோழர் முத்து சுந்தரம், தமிழக அரசு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க முன்னின்று உழைத்தவர். 2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 1லட்சத்து 72 ஆயிரம் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் எஸ்மா, டெஸ்மா சட்டத்தின்கீழ் டிஸ்மிஸ் செய்யப் பட்டபோது அதற்கு எதிராக போராடியும், உச்சநீதிமன்றத்தில் வழக்காடியும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும்பணி கிடைக்கச் செய்ததிலும் அவரது பங்குகுறிப்பிடத்தக்கது’’   தோழரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக