சனி, 16 பிப்ரவரி, 2019

பேச்சு வார்த்தை தோல்வி- வேலை நிறுத்தத்தில் செல்வதை AUAB உறுதிப்படுத்தியுள்ளது.

15.02.2019 அன்று BSNL CMD மற்றும் மனிதவள இயக்குனர் ஆகியோர் AUAB தலைவர்களை சந்தித்தனர். DoT ஏற்கனவே அறிவித்தபடி மூன்றாவது ஊதிய மாற்றத்தில் 5% ஊதிய நிர்ணய பலனை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதாக AUAB தலைவர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். எனினும், வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதற்கு இந்த உறுதி மொழியை DoT எழுத்தில் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால் இந்த கோரிக்கை கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மேலும், ஏற்கனவே அறிவித்த படி பஞ்சப்படி சமநிலையாக்கம் (DA NEUTRALISATION) என்பதை வழங்கி விட்டு பின்னர் 5% ஊதிய நிர்ணய பலனுக்கு செயல்படுவதை கூட தற்போது DoT நீர்த்து போகச் செய்துள்ளது. புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் காரணமாக AUAB தனது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென DoT வற்புறுத்துகிறது. வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டால் மட்டுமே AUAB தலைவர்களை தான் சந்திப்பேன் என தொலை தொடர்பு துறையின் செயலாளர் நிபந்தனை வைத்துள்ளார். BSNL நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUABயில் உள்ள பொதுச்செயலாளர்களை அனைவரும் சந்தித்து வேலை நிறுத்தத்தில் செல்வது என்று முடிவெடுத்துள்ளனர். அதே சமயத்தைல் தீவிரவாத தாக்குதலை அடுத்து பராமரிப்புகளை உறுதிப்படுத்த ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே 18.02.2019 முதல் நடைபெற உள்ள மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு AUAB கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக