வியாழன், 30 ஏப்ரல், 2020

தோழர் S.செல்லப்பா பணி நிறைவுBSNLஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச்செயலாளரும்தமிழ் மாநில தலைவருமான தோழர் S.செல்லப்பா 30.04.2020 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.

17.12.1979ல் குறு நேர இயக்குனராக நீலகிரி மாவட்டம் குன்னூரில் பணிக்கு சேர்ந்த தோழர் S.செல்லப்பா மார்ச், 1981ல் நிரந்தரம் பெற்றார்.  பணிக்கு சேர்ந்த நாள் முதலாகவே தொழிற்சங்க பணிகளில் முன்னணியில் நின்ற தோழர் S.செல்லப்பாவின் பணிகளுக்குதோழர் புதியவனின் நீலகிரி வருகை மேலும் மெருகூட்டியது.  ஒன்று பட்ட NFTE சங்கத்தில், K.G.போஸ் அணியின் முன்னணி ஊழியராக முன்னேறிய தோழர் S.செல்லப்பா குன்னூர் CTX கிளைச்செயலாளராகமாவட்ட சங்க நிர்வாகியாக பின்னர் 1989ல் நீலகிரி மாவட்ட செயலாளராக முன்னேறினார்.

நீலகிரியில் இவர் பணியாற்றிய காலத்தில் தான் தீரம் மிக்க வரலாற்று சிறப்பு மிக்க இரண்டு போராட்டங்களும் நடைபெற்றன.  1983ல் அன்றிருந்த கோட்ட பொறியாளரின் அதிகார வர்க்க போக்கிற்கு எதிராக சமரசமற்ற போராட்டம்தமிழகத்தில் K.G.போஸ் அணியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகமூட்டியது என்றால் அது மிகையாகாது.  அந்த போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்து வழி நடத்திய K.G.போஸ் அணி தலைவர்களின் அறிமுகம்அவரது செயல்பாட்டை மேலும் செழுமைப்படுத்தியது.  அதே போல 1989ல் நடைபெற்ற மாவட்ட அதிகாரியின் தான் தோன்றித்தனமான போக்கிற்கு எதிரான தல மட்ட போராட்டத்தின் தள நாயகர்களில் முக்கியமானவர் தோழர் S.செல்லப்பா.  இந்த போராட்டத்தில் இவரது பாத்திரம் அலாதியானது.

 1991ல் போபாலில் நடைபெற்ற E3 சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் நமது KG.போஸ் அணியின் சார்பாக அதிக சார்பாளரை அழைத்து சென்ற மாவட்ட செயலாளர் தோழர் செல்லப்பா தான்.  அந்த பங்கேற்பு மாநாட்டில் நமது வெற்றிக்கு ஒரு சிறு பங்காற்றியது.  அந்த மாநாட்டில் தோழர் மோனி போஸ் பொதுச்செயலாளராகவும்தோழர் VAN நம்பூதிரி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது நாம் அனைவரும் தெரிந்ததேசுமார் பத்தாண்டு காலம் நீலகிரி மாவட்ட செயலாளராக பணியாற்றிய போதுதமிழகம் முழுவதும் அறிந்த தலைவர்களில் ஒருவராக மாறினார்.  இவர் மாவட்ட செயலாளராக இருக்கும் போதேஅகில இந்திய பணிகளுக்காக தோழர் பத்ரியுடன் இணைந்து புதுடெல்லியில் தாதா கோஷ் பவன் சென்று ஒரு மாத காலத்திற்கு மேல் பணியாற்றினார்.   புதிய தோழர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய தோழர் செல்லப்பாவை மாநில தலைமை மிகச்சரியாக பயன்படுத்தியது.

1998ல் மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில மாநாட்டில்அதுவரை மாநில சங்க நிர்வாகியாக கூட செயல்பட்டிருக்காத தோழர் S.செல்லப்பாதமிழ் மாநிலச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2001ல் புதியதாக உருவாக்கப்பட்ட BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் S.செல்லப்பா இரண்டாவது மாநாட்டில் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பத்தாண்டு காலத்திற்கு மேல் BSNLஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயலாளராக திறம்பட செயல்பட்டார்.  2014ல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தன்னை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டு தமிழ் மாநில தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  அதே ஆண்டு அக்டோபரில் கொல்கொத்தாவில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் உதவி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் S.செல்லப்பா இன்று வரை அந்த பொறுப்பில் இருந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

 மிகச்சிறந்த போராளி.  கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்று செயல்படக் கூடிய அற்புதமான தோழர்.  மாற்று சங்கத்தை சார்ந்தவர்களும் இவருடன் இணைந்து பணியாற்ற விரும்பக் கூடிய நல்ல தோழர்.  இவருக்கும் NFTE மாநில செயலாளராக இருந்த தோழர் பட்டாபிக்கும் இருக்கும் நெருக்கம் அனைவரும் அறிந்ததே.  மிகச்சிறந்த பேச்சாற்றாலும்செயல்பாடும் கொண்ட தோழர்.  அமைதியான குன்னூரில் இருந்து தலைமை அழைத்த போது மறுக்காமல் பொறுப்புகளை ஏற்றுபல சிரமங்கள் வந்த போதும் அவற்றையெல்லாம் சந்தித்துதிறம்பட செயல்பட்டுஇன்று நாடு முழுவதும் அறிந்த தலைவராக பரிணமித்துள்ள தோழர் S.செல்லப்பா.  அகில இந்திய சங்க பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களோடு இணைந்துதமிழகத்திலும்அகில இந்திய அளவிலும் சங்க பணிகளில் திறம்பட செயல்பட்டு வரும் தோழர் S.செல்லப்பா.  தல மட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் நெருக்கமாக செயல்படக்கூடியவர், BSNLல் மிக மோசமாக சுரண்டப்பட்டுக் கொண்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் சங்கத்தை முதன் முதலில் உருவாக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.  தொடர்ந்து அந்த சங்கத்தின் நிர்வாகியாக இருந்து அவ்ர்களுக்கான இயக்கங்களை முன்னின்று நடத்தி வந்துக் கொண்டுள்ளார்.

 இவரது தொழிற்சங்க செயல்பாடுகள் அனைத்திலும்இவரது குடும்பம் முழுமையாக உடன் இருந்து ஆதரித்ததற்கு தமிழ் மாநில சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

   மிகச்சிறந்த சித்தாந்தமான இடதுசாரி கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு திறம்பட பணியாற்றி வரும் தோழர் S.செல்லப்பா அவர்களின் பணி ஓய்வுக் காலம் இந்த மானுடம் சிறக்க செம்மையாக இருந்திட கோவை மாவட்ட சங்கம் மனமார வாழ்த்துகிறது.

1 கருத்து: