திங்கள், 14 அக்டோபர், 2013

ஏர்டெல் சர்வதேச கட்டணம் உயர்வு

 
          நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான ஏர்டெல், தனது சர்வதேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த மாதம் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஐடியா நிறுவனமும் தனது சர்வதேச அழைப்புக்களின் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செய்யப்படும் அழைப்பிற்கு நிமிடத்திற்கு ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் நிமிடத்திற்கு ரூ.6.40 ஆக இருந்தது.

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக