வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிடுக ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பிரதி மாதம் 7ம்தேதிக்குள் சம்பளம் வழங்குவதை உத்திரவாதப்படுத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமலும், சட்ட சலுகைகளை அமல்படுத்தாமலும் அலட்சியம் காட்டி வரும் சென்னை இன்னோவெட்டி நிறுவத்திற்கு ஒப்பந்தம் வழங்கக்கூடாது.

இஎஸ்ஐ., பிஎப் ஆகியவற்றை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறைபடுத்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு மையங்களில் வியாழனன்று கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்கு எஸ்.கண்ணுச்சாமி, டிஎன்டிசிடபுள்யு மாவட்டத் தலைவர்என்.சண்முகவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தை டிஎன்டிசிடபுள்யு மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி துவக்கி வைத்து பேசினார்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.பரமேஸ்வரன், பிஎஸ்என்எல் மாநில அமைப்பு செயலாளர் வி.மணியன் மற்றும் எஸ்.வளர்மதி, சி.பரமசிவம், என்.குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 100க்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக