வியாழன், 21 மார்ச், 2019

Thursday, 21 March, 2019 வர்க்க போராளி தோழர். எம். முருகையா மறைந்தார் ! BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவிச் செயலாளரும், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், BSNL தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான அருமைத் தோழர். எம். முருகையா சமீப காலமாக ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவினால், 21.3.2019 மாலை 5.30 மணியளவில் காலமானார் என்ற துயரம் வாய்ந்த செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்!
56 வயதே ஆன தோழர். எம். முருகையா, சாத்தூர் தொலைபேசி நிலையத்தில் பகுதி நேர ஊழியராக 1980- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். துவக்க காலம் முதலே முற்போக்கு சிந்தனைகளுடன் தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1988- ஆம் ஆண்டு ஒன்றாக இருந்த NFTE- E 4 லைன் ஸ்டாஃப் மற்றும் நான்காம் பிரிவு சங்கத்தில் மாநில அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப் படுத்துவதற்கான பல்வேறு இயக்கங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். பகுதி நேர ஊழியர்களின் சம்பள உயர்வு, பிரேக் மஸ்தூர் நிரந்தரம் மற்றும் பல்வேறு கேஷுவல் லேபர் பிரச்னைகளுக்காக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகளைப் பெற்றுத் தந்தார். 1989- ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நிரந்தரம் பெற்றார். 1994- ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்ட இந்திய தொலைதொடர்பு ஊழியர் சங்கம் – ITEU லைன் ஸ்டாஃப் நான்காம் பிரிவு சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 
2001- ஆம் ஆண்டில் உருவான BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு தற்போது வரை செயல்பட்டு வந்துள்ளார். 
1999- ஆம் ஆண்டு துவக்கப் பட்ட தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், 2013- ஆம் ஆண்டு முதல் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மாநில கவுன்சில் உறுப்பினராகவும், தொலைதொடர்பு தோழன் பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். BSNL ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். 2013- ஆம் ஆண்டு சென்னை மாநில அலுவலகத்திற்கு மாற்றலாகிச் சென்றார். தேர்வின் மூலம் பதவி உயர்வு பெற்று, JUNIOR ENGINEER கேடரில் இறுதியாகப் பணியாற்றி வந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும், விருதுநகர் மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பணியாற்றியுள்ளார்.
தொலைதொடர்புத் துறையில் சுரண்டப்பட்டு வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை அணி திரட்டி, சங்கமாக உருவாக்கியதிலும், அவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம், பணி நிரந்தரம், ஈ.பி.எஃப்., ஈ.எஸ்.ஐ. போனஸ், பணித் தன்மைக்கேற்ற ஊதியம், ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, நீக்கப் பட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு சேர்த்தல் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்கு நடைபெற்ற போராட்டங்களிலும், பேச்சு வார்த்தைகளிலும், அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளிலும் கேந்திரமான பங்கை ஆற்றினார். இன்றைய நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட, 37 ஒப்பந்தத் தொழிலாளர்களை நீதிமன்றம் மூலம் நிரந்தரப் படுத்துவதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். 

உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த போதும் 28.1.2019 அன்று, ஒப்பந்தத் தொழிலாளர் சம்பள பிரச்னைக்காக சங்கத்தின் பிற தலைவர்களுடன் மத்திய தொழிலாளர் நலத் துறை துணை ஆணையரை நேரில் சந்தித்து, கடுமையாக வாதாடினார் என்பதை நினைவு கூர்கிறோம். 
அரசாங்க சட்டங்களிலும், இலாகா விதிகளிலும் ஆழ்ந்த அறிவு, கடுமையான உழைப்பு, எளிமையான வாழ்க்கை, கனிவான அணுகுமுறை, மாற்றுக் கொள்கையுடையவர்களிடமும் நட்பு என்ற சிறப்புகளுக்கு உரியவர். 
சுரண்டப் படும் தொழிலாள வர்க்கத்திற்காகவும், பொதுவுடைமைக் கொள்கைக்காகவும் உறுதியான போராளியாக வாழ்ந்து மறைந்தார்.
அவரது மறைவு நமது தொழிற்சங்க இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
செங்கொடி தாழ்த்தி அவருக்கு கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறோம் !
அவரது அர்ப்பணிப்பு உணர்வும், கொள்கைப் பிடிப்பும் நமக்கு என்றென்றும் வழிகாட்டும் !
செவ்வணக்கம் தோழர் முருகையா !
அவரது மனைவி திருமிகு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், புதல்வன் பாரதிராஜா, புதல்வி கல்பனா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் !
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மாநிலம் முழுவதும் நமது சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப் படுகின்றன.
அவரது இறுதி நிகழ்ச்சிகள் சாத்தூரில் 22.3.2019 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளன.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தல்மாண்புமிகு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வகுமார் சின்னையன் சந்தித்து AUAB (BSNL) சார்பில் நமது கோரிக்கையை வழியுறுத்தி கோரிக்கை மனு 21/02/2019, வழங்கப்பட்டது,தோழர்கள் C மணி V சண்முகம்  பழனிவேலு  ஷாஜஹான்  மாயகிருஷ்ணன்  மாவட்டச்செயலாளர்கள் V மணியன்  N புண்ணியகோட்டி மாநில சங்கநிர்வாகிகள்பங்கேற்றனர்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

It is a do or die situation - AUAB calls on the employees to organise the 3 strike massively.The AUAB held it's crucial meeting today. General Secretaries / senior leaders of BSNLEU, NFTE , SNEA, AIBSNLEA, AIGETOA, BSNL MS, ATM, TEPU and BSNL OA participated. The meeting reviewed the preparations going on throughout the country for the 3day strike. All the General Secretaries gave their reports on the preparations. It is very encouraging to note that, excellent preparations are going on. Especially, the momentum has picked up tremendously in the last 2 days. After considering all the factors, the meeting unanimously decided to go ahead with the strike. It starts from midnight (00:00 hrs.) today. If any clarification is required, comrades are requested to contact their respective General Secretaries.
                         AUAB ZINDABAD.

டெலிகாம் துறையில் கூட்டுக்களவாணி முதலாளித்துவம்

டெலிகாம் துறையில் கூட்டுக்களவாணி முதலாளித்துவம்
- தோழர் பி.அபிமன்யு (அழகாக விளக்குகிறார் கொஞ்சம் அமைதியாக வாசியுங்கள்)

டெலிகாம் துறையில், 2016ஆம் ஆண்டு செப்டம்பரில், ரிலயன்ஸ் ஜியோ நுழைவுக்குப் பின்னர், ஒட்டுமொத்த டெலிகாம் துறையும் பயங்கரமான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. டெலிகாம் துறையில் மிகப்பெரிய நிறுவனங்களாக விளங்கிய ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியிருப்பதுடன், மிகவும் ஆழமான அளவில் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகி இருக்கின்றன.  ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலயன்ஸ் இன்போகாம் முதலானவை மூடப்பட்டுவிட்டன, இல்லையேல் மிகப்பெரிய நிறுவனங்களுடன் இணைந்துவிட்டன. பன்னாட்டு ஜாம்பவான் நிறுவனமான வோடாபோன், இந்தியாவில் தன்னுடைய  வர்த்தகத்தைத் தொடரமுடியாமல், குமாரமங்கலம் பிர்லாவுடைய ஐடியா நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. இப்போது அதன் பெயர் வோடாபோன் ஐடியா.
ஏர்டெல்லும், வோடாபோன் ஐடியாவும் தங்களுடைய வாடிக்கையாளர்களை மிகவும் வேகமானமுறையில் இழந்து வருகின்றன. இவற்றுடன் இணைந்திருந்த பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு மாதமும் ஜியோவுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.  பழைய நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் தன்னுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதுடன் சற்றே கூடுதலாக்கியும் இருக்கிறது.
ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கடனில் மூழ்கியிருக்கின்றன. வோடாபோன் ஐடியா-வின் கடன் 1.20 லட்சம் கோடி ரூபாயாகும். ஏர்டெல் நிறுவனத்தின் கடன் 1.13 லட்சம் கோடி ரூபாயாகும். இவற்றுடன் ஒப்பிட்டால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவேயாகும்.  டெலிகாம் துறையின் மொத்தக் கடன் கிட்டத்தட்ட 8 லட்சம் கோடி ரூபாயாகும் என்று கூறப்படுகிறது. இக்கடன்தொகையில் பெரும்பகுதி வங்கிகளின் செயல்படா சொத்துக்களாக (வராக் கடன்களாக) மாறி, வங்கித்துறையையும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

டெலிகாம் துறைக்குள் ஜியோ(அம்பானி)வருவதற்கு முன்பிருந்த நிலை வேறாகும். இது ஒரு வளம் மிகுந்த துறையாக, அந்நிய நேரடி முதலீட்டைப் பெரிய அளவில் கவரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால், ஜியோ வந்தபிறகு, இந்தத்துறையில் நிலைமைகளில் வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டன. ஜியோவைப் போலவே, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்களும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் விளங்கிய நிறுவனங்கள்தான். எனினும்கூட, ஜியோ மட்டும் எப்படி இதர டெலிகாம் நிறுவனங்களை தீர்மானகரமான முறையில் முறியடித்துவிட்டு தான் மட்டும் வேகமாக முன்னேற முடிந்தது?

ஜியோ நிறுவனத்திற்கு, அம்பானிக்கு மோடி அரசாங்கத்தால் மிகவும் அடாத விதத்தில் அனுகூலங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவே, ஜியோ இதனைச் செய்ய முடிந்தது.
ரிலையன்ஸ் ஜியோவின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். ஜியோ தன்னுடைய சேவையைத் தொடங்கிய அன்று, பிரபல்யமான தேசியப் பத்திரிகைகளில் முதல் பக்கங்களில் வெளியான விளம்பரங்களில் ஜியோவின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பிரதமர் மோடியின் படத்தைப் போட்டு, அவர், மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக வெளிவந்தன.  அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குக்கூட எந்தப் பிரதமரிடமிருந்தும் இத்தகைய அரவணைப்புக் கிடைத்ததில்லை. ஜியோ, நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தைப் பெற்றிருக்கிறது என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் இந்த விளம்பரமே செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றது.

ஜியோ தன்னுடைய சேவைகளைத் தொடங்கிய அன்றிலிருந்தே, இதர டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளை அழித்து ஒழித்திடும் விதத்தில் தன்னுடைய நிறுவனத்தின் சேவைகளுக்கான விலைகளை நிர்ணயித்தது. ஆரம்பத்தில் இலவசக் குரலொலி (free voice), உரைகள் (text), தரவுகள் முதலானவற்றை தன் வாடிக்கையாளர்களுக்கு, “தொடக்கநிலை சலுகைகள்” (‘Welcome Offer) என்ற பெயரில் இலவசமாகவே வழங்கியது. ‘டிராய்’  எனப்படும் இந்திய டெலிகாம் முறைப்படுத்தல் அதிகாரக்குழுமத்தின் (TRAI-Telecom Regulatory Authority of India) கட்டளையின்படி இத்தகைய ‘இலவசங்களை’ “மேம்படுத்துவதற்கான சலுகை” என்பதன்கீழ் அளித்திடமுடியும். எனினும், இவ்வாறான இலவசங்களை 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கிட வேண்டும் என்று ஒரு நிபந்தனையுடன்தான் இதனைச் செய்திட முடியும். ஆனால், ஜியோ நிறுவனம் இலவசக் குரலொலி, உரைகள், தரவுகள் சேவைகளை,”புத்தாண்டு சலுகை” என்று பெயரை மாற்றி, 90 நாட்களுக்கும் மேல் நீடிப்பதைத் தொடர்ந்தது. இதர நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவே இதனைச் செய்தது. எனவேதான் இத்தகைய ஜியோ நிறுவனத்தின் உத்தியை, இதர நிறுவனங்களை அழித்து ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று சொல்வதைத்தவிர வேறெப்படியும் சொல்ல முடியாது.

ஜியோ நிறுவனத்தின் இறுதிக் குறிக்கோள், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதேயாகும். எனவேதான் இது ஒட்டுமொத்த டெலிகாம் துறையையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

இதில் மிகவும் துயரார்ந்த நிலை என்னவெனில், ஜியோ நிறுவனம் தன்னுடைய குறிக்கோளை எய்துவதற்காக, மோடி அரசாங்கமே வசதி செய்துகொடுப்பதாகும்.
இதர நிறுவனங்களை அழித்து ஒழித்திடும் விதத்திலான விலைகள் என்றால் என்ன? மிகவும் எளிதாகச் சொல்வதென்றால், எந்தவொரு பொருளையோ அல்லது சேவையையோ, தன்னுடைய போட்டியாளர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், அவற்றின் உற்பத்திச் செலவினத்திற்கும் குறைவான  தொகைக்கு விற்பது என்று பொருளாகும். 2003 மே மாதத்தில் வெளியிடப்பட்ட ‘டிராய்’ நிறுவனத்தின் கட்டளை, “டெலிகாம் சேவைகளின் மூலமாக இணையப் பயன்பாடுக் கட்டணங்கள் வசூலித்திடும் டெலிகாம் நிறுவனங்கள், இதர டெலிகாம் நிறுவனங்களை அழித்து ஒழித்துக்கட்டும் விதத்தில் தங்களின் விலைகளை நிர்ணயம் செய்திடக்கூடாது,” என்று கூறுகிறது. (“A teleco’s tariff would be considered non-predatory, if it is recovering Interconnect Usage Charges (IUC) and costs, through delivery of telecom services.”) இந்த வரையறையின்படி பார்த்தோமானால், ரிலயன்ஸ் ஜியோ இவ்வாறாக இதர டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் விதத்தில் விலை நிர்ணயம் செய்திருப்பதற்காகத் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இதர நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தை இது விதித்திருப்பது மட்டுமல்ல, அநேகமாக இலவசமாகவும் வழங்கிக் கொண்டிருக்கிறது. டிராய் இதில் நிச்சயமாகத் தலையிட்டு, ஜியோவை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். எனினும், டிராய், ஜியோ நிறுவனத்திற்குக் கொல்லைப்புற வழியாக, தன்னுடைய சொந்த கட்டளையையேமீறி, ஆதரவு அளித்துக்கொண்டிருப்பது, வருந்தத்தக்கதாகும்.
அதே சமயத்தில், ஜியோவைக் கட்டுக்குள் கொண்டுவர  டிராய் நிறுவனம் தவறிவிட்டது என்பதற்காக, அதனை இழுத்துப்பிடித்திடக்கூடிய தைரியம் அதிகாரவர்க்கத்தினர் மத்தியில் ஒருவருக்கு இருந்தது. அவர், டெலிகாம் முன்னாள் செயலாளராக இருந்த ஜே.எஸ். தீபக் ஆவார். அனைத்து டெலிகாம் நிறுவனங்களும், தாங்கள் ஈட்டிய வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு,  உரிமக் கட்டணமாகவும், அலைவரிசைகள் கட்டணமாகும் அரசாங்கத்திற்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தற்போது அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் வருவாயும் கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில், இவ்வாறு அவை அரசாங்கத்திற்கு அளித்துவந்த உரிமக் கட்டணம் மற்றும் அலைவரிசைக் கட்டணமும் இயற்கையாகவே குறைந்துவிட்டன. ஜே.எஸ். தீபக் இந்தப் பிரச்சனையை டிராயிடம் எடுத்துச் சென்றார். 2017 பிப்ரவரி 23ஆம் தேதியிட்ட, டிராய் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மாவிற்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், அரசாங்கம் 2016 அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலான காலத்திற்கான உரிமக் கட்டணத்தில் 790 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டி இருந்தார். மேலும் அக்கடிதத்தில் ரிலயன்ஸ் ஜியோ நிறுவனம் இவ்வாறு இதர டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் விலை நிர்ணயம் செய்திருப்பதைக் கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் ஜே.எஸ். தீபக், ரிலயன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு எவ்விதமானக் கட்டுப்பாடும் விதிக்காமல் இந்த நிலை நீடிக்குமானால்,  டெலிகாம் நிறுவனங்கள் அலைவரிசைகளுக்கான கட்டணங்களாக அரசாங்கத்திற்கு அளிக்க வேண்டிய 3 லட்சத்து 08 ஆயிரம் கோடி ரூபாயை அளிப்பதற்கான சக்தியையும் அது பாதித்துவிடும் என்று எச்சரித்தார்.  ஆனால், அதன்பின் நடந்தது என்ன தெரியுமா? இவ்வாறு டிராயைக் கேள்வி கேட்டமைக்காக ஜே.எஸ்.தீபக் அந்தப்பதவியிலிருந்தே தூக்கி எறியப்பட்டிருக்கிறார். 2017 மார்ச் 1 அன்று அவர் டெலிகாம் செயலாளர் பதவியிலிருந்து, வர்த்தகத்துறையின் சிறப்புக் கடமை அதிகாரியாக (Officer on Special Duty) தூக்கி எறியப்பட்டுள்ளார். ரிலயன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குக் குறுக்கே எவரேனும் வந்தால் அவருக்கு என்ன கதியேற்படும் என்பதை இவ்வாறு மோடி அரசாங்கம் நாட்டிற்குக் காட்டியிருக்கிறது.   அதே சமயத்தில், அரசாங்கத்திற்கும், டெலிகாம் நிறுவனங்கள் உரிமக் கட்டணம் மற்றும் அலைவரிசைக் கட்டணம் வழங்காததன் காரணமாக,  பல்லாயிரம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஜே.எஸ். தீபக் டிராய் குழுமத்திடம் கேள்வி கேட்டதற்குப்பின்னர், டிராய் நிறுவனத்தின் மீது மேலும் பலர் விமர்சனக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர். அது, ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சனங்களைச் செய்தனர். இவ்வாறு வருகின்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, டிராய் 2018 பிப்ரவரி 16 அன்று இதர டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் விதத்தில் குறைந்த கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஒரு புதிய வரையறையைக் கொண்டுவந்தது. இதன்படி, ஒரு நிறுவனம் வாடிக்கையாளர்களின் அல்லது வருவாயின் சந்தைப் பங்கில் 30 சதவீதத்தைப் பெற்றிருக்குமானால் அது ஒரு குறிப்பிடத்தக்க சந்தை அதிகாரம் படைத்ததாகக் கருதப்படும் என்பதாகும். (A company having 30 per cent market share of customers or revenue, is defined as an SMP (significant market power) இவ்வாறு ‘குறிப்பிடத்தக்க சந்தை அதிகாரம்’ பெற்றிருக்கக்கூடிய நிறுவனம் இதர நிறுவனங்களை ஒழித்துக்கட்டும்விதத்தில் குறைந்த கட்டணம் நிர்ணயிக்க முடியாது என்பதாகும். இதன் பொருள், ஒரு நிறுவனம், ‘குறிப்பிடத்தக்க சந்தை அதிகாரம்’ பெற்ற நிறுவனமாக இல்லையெனில், அது தான் வழங்கும் சேவைகளுக்காகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்திடலாம், அதனை, இதர நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதற்கான விலை நிர்ணயம் என்று சொல்ல முடியாது என்பதாகும். இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஜியோவின் சந்தைப் பங்கு 2018 ஆகஸ்டில்தான் 20 சதவீத குறியீட்டை எட்டியது. இவ்வாறு, 2018 பிப்ரவரி 16 அன்று டிராய் வெளியிட்ட உத்தரவு, ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக, தன்னுடைய விதிகளில், மிகவும் வெட்கக்கேடான முறையில், மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. 
எனினும் டிராயின் இந்த உத்தரவுக்கு எதிராக, டெலிகாம் தாவாக்கள் தீர்வுகாணுதல் மற்றும் மேன்முறையீட்டு நடுவர் மன்றத்தில் (TDSAT - Telecom Disputes Settlement and Appellate Tribunal).) மனு தாக்கல் செய்யப்பட்டது. நடுவர் மன்றம் டிசம்பர் 13 அன்று புதிய வரையறையை நிர்ணயித்த டிராயின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் நடுவர் மன்றம், டிராயை, டெலிகாம் கம்பெனிக்கு (ஜியோ என்று வாதித்திடுக) செயற்கையான முறையில் பாதுகாப்பு அளிப்பதற்காக இவ்வாறு புதிய வரையறை கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறி டிராயைக் கண்டித்தது. நடுவர் மன்றத்தில் இந்த உத்தரவு, டிராயின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, அதன் உண்மையான சொரூபத்தை நாட்டு மக்களிடம் தோலுரித்துக் காட்டியது. ஜியோ நிறுவனம், இவ்வாறு இதர டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் விதத்தில் குறைந்த கட்டணம் விதிப்பதற்கு டிராய் அனுமதித்திருப்பது, ஜியோ நிறுவனத்திற்கு உதவிடுவதற்காக, டிராய் மேற்கொண்ட சூழ்ச்சித் திட்டமேயாகும்.
டிராய் குழுமம், ஜியோ நிறுவனத்திற்கு தகாதமுறையில் மற்றுமொரு அனுகூலத்தை அளிப்பதற்காக, வேறொரு தில்லுமுல்லு நடவடிக்கையையும் செய்திருக்கிறது. அதாவது, டிராய், ஜியோவின் இணையத்தொடர்புப் பயன்பாட்டுக் கட்டணத்தையும் (Interconnect Usage Charge (IUC)) வெகுவாகக் குறைத்திருக்கிறது.  ஒரு டெலிகாம் நிறுவனத்தின் வலையமைப்பிலிருந்து, மற்றொரு நிறுவனத்தின் வலையமைப்புக்கு அழைப்பு சென்றால், முந்தைய டெலிகாம் நிறுவனம், பிந்தைய டெலிகாம் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்திட வேண்டும். இதற்கு ஐயுசி  (இணையத்தொடர்புப் பயன்பாட்டுக் கட்டணம்) (IUC-Interconnect Usage Charge) என்று பெயர். இதற்கான கட்டணம் நிமிடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்கிற அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. 2017 டிசம்பரில், ரிலயன்ஸ் ஜியோ 16 கோடி (160 மில்லியன்) வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது. இதனால், ஜியோ நிறுவனம் இதர டெலிகாம் நிறுவனங்களுக்க அதிக அளவில் இணையத்தொடர்புப் பயன்பாட்டுக் கட்டணங்களை அளிக்க வேண்டியிருக்கிது. எனவே, ஜியோ நிறுவனத்திற்கு உதவுவதற்காக, டிராய், ஐயுசி கட்டணத்தை 2017 அக்டோபரிலிருந்து 57 சதவீத அளவிற்குக் குறைத்துள்ளது. இதன் விளைவாக, ஜியோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஆதாயம் அடைந்தது. உண்மையில், இவ்வாறு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, ஜியோ லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிட டிராய் உதவியிருக்கிறது. ஜியோ துவங்கப்பட்டு 15 மாதங்கள் ஆகியிருந்தபோதிலும், அதுவரையிலும், ஜியோ நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. 
உதாரணமாக, 2017 ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்காலத்தில் 2,140 கோடி ரூபாய் ஐயுசி கட்டணமாகக் கொடுத்திருக்கிறது. ஆனால், அதன்பின்னர் 2017 அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக் காலத்திற்கு அது 1,082 கோடி ரூபாய் மட்டுமே ஐயுசி கட்டணமாகக் கொடுத்திருக்கிறது. இவ்வாறு ஜியோவின் ஐயுசி சுமையை டிராய், 50 சதவீதம் குறைத்துவிட்டது. இதன் விளைவாக, முதன்முறையாக, 2017 அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக் காலத்தில், ஜியோ 504 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியது. 2017 ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்காலத்தில் ஜியோ 271 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்தது என்பது குறித்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான அம்சமாகும். மேலும், இவ்வாறு ஐயுசி கட்டணத்தைக் குறைத்ததன் காரணமாக, பழைய நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் தங்கள் வருவாயில் வீழ்ச்சியினை எதிர்கொண்டன. இவ்வாறு ஐயுசி கட்டணத்தைக் குறைத்ததன் காரணமாக 2017 அக்டோபர் – டிசம்பரில் ஏர்டெல் நிறுவனத்தின் இலாபம் 39 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இவ்வாறு டிராய் நிறுவனமும் மோடி அரசாங்கமும்  மேற்கொண்ட அறநெறி பிறழ்ந்த நடவடிக்கைகள், முகேஷ் அம்பானிக்கு டெலிகாம் துறையைக் கைப்பற்றிட மிகப் பெரிய அளவில் உதவியிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளின் காரணமாக, டெலிகாம் துறை நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்திற்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
(கட்டுரையாளர், பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்களின் கன்வீனர்)
(தமிழில்: ச. வீரமணி)

AUAB பரிசீலனை கூட்டம் நடைபெற்றது- வேலை நிறுத்தத்தில் செல்ல முடிவு....

16.02.2019 அன்று AUAB கூட்டம் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, BSNL MS, ATM, TEPU, மற்றும் BSNL OA ஆகிய சங்கங்களின் பொது செயலாளர்களும், மற்றும் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களுக்கு அந்தக் கூட்டம் தனது அஞ்சலியை தெரிவித்துக் கொண்டது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுள்ள போராட்ட தயாரிப்பு பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது வரை AUABயுடன் DoT பேச்சு வார்த்தை நடத்தாதது தொடர்பாக அந்தக் கூட்டம் விவாதித்து தனது வருத்தத்தை பதிவு செய்தது. ஒரு விரிவான விவாதத்திற்கு பின் வேலை நிறுத்தத்தில் செல்வது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தின் கடைசி கட்ட பணிகள் தொடர்பாக விரிவாக செயல்பட வேண்டும் என மாநில மற்றும் மாவட்ட சங்கங்களை அந்தக் கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. அதே போல தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்த 40 CRPF ஜவான்களின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் 18.02.2019 அன்று காலை 10.00 மணிக்கு அனைத்து அலுவலகங்களிலும் அஞ்சலிக் கூட்டங்களை நடத்த வேண்டும் என AUAB அறைகூவல் விட்டுள்ளது.

சனி, 16 பிப்ரவரி, 2019

பேச்சு வார்த்தை தோல்வி- வேலை நிறுத்தத்தில் செல்வதை AUAB உறுதிப்படுத்தியுள்ளது.

15.02.2019 அன்று BSNL CMD மற்றும் மனிதவள இயக்குனர் ஆகியோர் AUAB தலைவர்களை சந்தித்தனர். DoT ஏற்கனவே அறிவித்தபடி மூன்றாவது ஊதிய மாற்றத்தில் 5% ஊதிய நிர்ணய பலனை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதாக AUAB தலைவர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். எனினும், வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதற்கு இந்த உறுதி மொழியை DoT எழுத்தில் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால் இந்த கோரிக்கை கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மேலும், ஏற்கனவே அறிவித்த படி பஞ்சப்படி சமநிலையாக்கம் (DA NEUTRALISATION) என்பதை வழங்கி விட்டு பின்னர் 5% ஊதிய நிர்ணய பலனுக்கு செயல்படுவதை கூட தற்போது DoT நீர்த்து போகச் செய்துள்ளது. புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் காரணமாக AUAB தனது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென DoT வற்புறுத்துகிறது. வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டால் மட்டுமே AUAB தலைவர்களை தான் சந்திப்பேன் என தொலை தொடர்பு துறையின் செயலாளர் நிபந்தனை வைத்துள்ளார். BSNL நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUABயில் உள்ள பொதுச்செயலாளர்களை அனைவரும் சந்தித்து வேலை நிறுத்தத்தில் செல்வது என்று முடிவெடுத்துள்ளனர். அதே சமயத்தைல் தீவிரவாத தாக்குதலை அடுத்து பராமரிப்புகளை உறுதிப்படுத்த ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே 18.02.2019 முதல் நடைபெற உள்ள மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு AUAB கேட்டுக் கொள்கிறது.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

ஓய்வு பெறும் வயதை குறைக்க அனுமதியோம்- ஊதிய மாற்ற பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு காண்போம்- AUAB உறுதி

BSNL CMDக்கு 19.12.2018 அன்று DOT எழுதிய கடிதம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் ஊதிய மாற்றத்தினால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடுகட்ட BSNL கொடுத்துள்ள முன்மொழிவுகள் ஏற்கத்தக்கதல்ல என DOT தெரிவித்துள்ளது. மேலும், ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைக்கும் திட்டத்தை BSNL நிர்வாகம் கொண்டுள்ளதாக இந்த கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது. ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைப்பதை AUAB எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளாது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம். VRS/CRS திட்டத்தை அமல்படுத்த BSNL நிர்வாகம்/DOT எடுக்கும் எந்த ஒரு முயற்சியையும் AUAB உறுதியாக எதிர்த்து போராடி முறியடிக்கும். மேலும், ஊதிய மாற்ற பிரச்சனையில், BSNL நிதி நிலைமை தொடர்பாக DOT கொண்டுள்ள கருத்தையும் AUAB ஏற்றுக்கொள்ளவில்லை. ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண AUAB உறுதியுடன் போராடும்.- தோழர் P.அபிமன்யு அமைப்பாளர் AUAB.

திங்கள், 3 டிசம்பர், 2018

Monday, 03 December, 2018Read MoreDownload காலவரையற்ற வேலை நிறுத்தத்தை AUAB ஒத்தி வைத்தது.

மத்திய அமைச்சரோடு பேச்சு வார்த்தை நடைபெறுவதற்காக 03.12.2018 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை 02.12.2018 அன்று நடைபெற்ற AUAB கூட்டம் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தது. இந்த சூழ்நிலையில் AUAB தலைவர்களுக்கும் மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கும் இடையே இன்று (03.12.2018) அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. AUABயின் கோரிக்கைகளில், BSNLக்கு 4G அலைக்கற்றை வழங்குவது, ஓய்வூதிய மாற்றம், BSNL வழங்குகின்ற ஓய்வூதிய பங்களிப்பில் அரசு உத்தரவுகளை அமலாக்குவது மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் ஆகியவற்றை அரசாங்கம் மற்றும் BSNL நிர்வாகம் ஏற்றுக் கொண்டன. அவற்றின் அமலாக்கத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று {03.12.2018) நடைபெற்ற AUAB கூட்டத்தில், அதி முக்கியமான பிரச்சனையான 3வது ஊதிய மாற்றத்தில், அரசிற்கும், BSNL நிர்வாகத்திற்கும் இன்னமும் சற்று கூடுதல் அவகாசம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இவற்றின் அடிப்படையில் AUAB தனது காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அடுத்த தகவல் வரும் வரை ஒத்தி வைப்பது என முடிவு செய்துள்ளது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!


AUAB தலைவர்களுக்கும்  தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது .  BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு  , ஓய்வூதிய மாற்றம் ,  BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை  AUAB தலைவர்கள் ஏற்கவில்லை .
இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன்  விவாதிப்பதிற்கான  வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு  செய்துள்ளது.  மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல்   நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்
பி.அபிமன்யூ, பொதுச்செயலர்

நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள்

அன்பார்ந்த தோழரே, 30.11.2018 அன்று CMDஉடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் தரவேண்டும் என்கிற பிரச்சனயை AUAB தலைவர்கள் கடுமையாக விவாதித்தனர். மீதமுள்ள 7%ஐ ஓய்வூதிய நிதியில் BSNL கால தாமதமின்றி செலுத்த வேண்டும் என வலுவாக கோரினர். இறுதியில் மற்றுமொரு 3%ஐ 2019, மார்ச் மாதத்திலும், மீதமுள்ள 4%ஐ அடுத்த தவணையிலும் செலுத்துவதாக BSNL CMD ஏற்றுக் கொண்டார்.

புதன், 3 ஜனவரி, 2018

தொடரும் போராட்டம்

பட்டினிப்போர் வெல்க

தோழர்களே...

தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இதுநாள் வரை வழங்காததைக் கண்டித்தும் பிரதி மாதம் 7ஆம் தேதி சம்பளம் வழங்குவதை
உறுதிப் படுத்தவும் 02.01.2018 காலை 10 மணி முதல் தமிழ் மாநில அலுவலகம் முன்பு BSNLEU மற்றும்   TNTCWU மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும்                  காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் BSNLEU மாநிலத் தலைவர் தோழர் C.செல்லப்பா மற்றும் TNTCWU மாநிலத் தலைவர்  M.முருகையா அவர்களின் கூட்டுத் தலைமையுடன் தொடங்கியது.       


போராடுவோம் !
வெற்றி பெறுவோம் ! 
இறுதி வெற்றி நமதே !திங்கள், 25 டிசம்பர், 2017

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்


வெண்மணி தியாகிகள் தினம்

ஆறிடுமா
இல்லை அணைந்திடுமா
உங்கள் மேலிட்ட தீ
எப்படி எரிந்து போயிருக்கும்
உங்கள் உடல்கள்
அடங்கக்கூடியவையா
உங்கள் குரல்கள்
மறந்துவிடுமா
உங்கள் நினைவுகள்…….
ஆண்டுகள் பல ஆனாலும்
சாதியின் கொடுங்கரங்கள்
வர்க்கத்தோடு பிண்ணிப்பிணைந்து
படர்ந்து கொண்டிருக்கின்றன
இல்லை விடமாட்டோம்
அவை அழிய விடமாட்டோம்
தீயின் நாக்குகள்
உங்களின் மேல் சுட்டதை விட
இன்னும் அதிகமாய்
எங்களுள் கனன்று கொண்டிருக்கிறது
வெண்மணி தியாகிகளே
உங்கள் நினைவுகளை சுமந்து
வர்க்கப்போரை வாளாய் ஏந்தி
களத்தில் நிற்கிறோம்
முதலாளித்துவத்தை, நிலப்பிரபுத்துவத்தை
பார்ப்பனீயத்தை,
மறுகாலனியை வீழ்த்தாது
வீழாது எங்கள் தலை.

திங்கள், 11 டிசம்பர், 2017

BSNL நிறுவனம் காக்க நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு 00.01 மணி முதல் 13-12-2017 நள்ளிரவு 00.59 வரை 48 மணி நேரம் நடைபெறும்.அதை மாபெரும் வெற்றியடைய செய்வோம்.அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத போக்கை முறியடிப்போம்.

தலைப்பைச் சேருங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் காக்க வேலைநிறுத்தம் வெல்லட்டும் வெல்லட்டும் வேலை நிறுத்தம் வெல்லட்டும்


 ஏ.பாபு ராதாகிருஷ்ணன்,மாநில செயலர்.
<<<பதிவிறக்கம் செய்ய >>>>
                               
இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவது என்ற பெயரால் அரசுத்துறை நிறுவனமாக இருந்ததை 01.10.2000 முதல் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமாக ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். இதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் அள்ளித்தருவோம் என வாக்குறுதிகளை கொடுத்தனர்.
ஆனால் ஆரம்ப நாள் முதலே இந்த நிறுவனத்தை சீரழிக்க முயற்சி செய்தனர். நவீன தொழில்நுட்ப சேவையான மொபைல் சேவையினை தனியார் நிறுவனங்கள் எல்லாம் கொடுக்க ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கழித்த பின்னரே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர்தான் அந்த வாய்ப்புக் கூட வழங்கப்பட்டது.
தடுக்கப்பட்ட வளர்ச்சி
மொபைல் சேவை வழங்க ஆரம்பித்து ஐந்தாண்டு காலத்திற்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் பல தனியார் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி மொபைல் சேவையில் இரண்டாம் இடத்திற்கு வந்தது. இன்னமும் ஒரு ஆண்டு காலம் இதே வேகத்தில் சென்றால் முதலிடத்திற்கு வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருந்தது. பொதுத்துறை நிறுவனத்தின் மீது இந்திய நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாகவும், சிறப்பான சேவையின் காரணமாகவும் இந்த நிலை உருவானது.
ஆனால் இந்த நேரத்தில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் 2007ஆம் ஆண்டு தனது விரிவாக்கத்திற்காக இறுதி செய்யப்பட்டிருந்த 4.5 கோடி கருவிகளுக்கான டெண்டரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரத்து செய்தார். சேவையின் விரிவாக்கம் தடுக்கப்பட்டது. பின்னர் 9.3 கோடி கருவிகள் வாங்குவதற்காக டெண்டர் இறுதி செய்யப்பட இருந்த நேரத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அதனையும் ரத்து செய்தது. ஒரு ஆறாண்டு காலத்திற்கு மேல் கருவிகளின் பற்றாக்குறையின் காரணத்தால் ஒட்டு மொத்தமாக பிஎஸ்என்எல்-லின் வளர்ச்சி முடக்கப்பட்டது.
கருவிகளின் பற்றாக்குறையின் காரணமாக வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு சேவையின் தரத்திலும் குறைபாடு ஏற்பட்டது. 2007ஆம் ஆண்டு வரை நாளொன்றுக்கு பல கோடி ரூபாய்களை லாபமீட்டி வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு பின் மெல்ல மெல்ல தேய ஆரம்பித்தது.
அரசின் சமூக கடமைகளுக்காக
அரசாங்கத்தின் சமூக கடமைகள் அமலாக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு இருந்தது. ஒரு புறம் லாபம் தரும் நகரப் பகுதிகளிலும், பெருநகர பகுதிகளிலும் மட்டுமே தனியார் நிறுவனங்கள் தங்களது அக்கறையான சேவையை வழங்கி வந்த நிலையில் தொலை தூர கிராமப்புறங்கள், மலைப் பகுதிகள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்த மக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் சேவையினை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியது. அரசாங்கத்தின் சமூக கடமைகளை நிறைவேற்றுவதற்காக இந்த பொதுத்துறை நிறுவனம் அதனால் ஏற்படும் நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமல் சேவையினை வழங்கி வருகிறது. இந்த நஷ்டத்தினை இதுவரை அரசாங்கம் ஈடுகட்டவே இல்லை.
சிறந்த சேவை தர களமிறங்கிய ஊழியர்கள்
இந்த நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை காக்கும் பொறுப்பினை இதில் பணியாற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும் ஏற்றுக் கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாகவாடிக்கையாளர் மகிழ்விப்பு இயக்கம்”, “புன்முறுவலுடன் சேவைபோன்ற இயக்கங்களை பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தி சேவையினை மேம்படுத்தினர். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி முதற்கொண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை தனது பணி நேரத்திற்கு மேல் ஒரு மணி நேரம் கூடுதல் பணி செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை தலைமேல் கொண்டு அதிகாரிகளும் ஊழியர்களும் இரவு, பகல் பார்க்காமல் கூடுதலாக பணியாற்றினார்கள்.
பிஎஸ்என்எல்-லின் புத்தாக்கம்
ஒரு சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தொழிற்சங்கங்களின் இந்த முயற்சியின் காரணமாக மீண்டு வர துவங்கியது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான முயற்சிகளின் காரணமாக 2014-15ஆம் ஆண்டுகளில் இருந்து செயல்பாட்டு லாபத்தை பெற துவங்கியது. தேய்மான செலவுகள் என 7,000 முதல் 8,000 கோடி ரூபாய்களென நிர்ணயிக்கப்பட்டதின் காரணமாகவே நிகர லாபத்தை அடைய முடியாமல் இருந்தது. மத்திய அரசாங்கம் கொண்டு வந்த பண மதிப்பின்மை காரணமாகவும், மோசடித்தனம் நிறைந்த ரிலையன்ஸ் ஜியோவின் வருகையின் காரணமாகவும், கடந்த நிதியாண்டில் தனியார் நிறுவனங்களின் வருவாய் 30 முதல் 40 சதவிகிதம் குறைந்த நிலையிலும், பிஎஸ்என்எல்-ன் வருவாய் குறையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஊதிய மாற்றம்
இந்த சூழ்நிலையில் பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிக நீண்ட பத்தாண்டு காலத்திற்கு பின் வரவேண்டிய ஊதிய மாற்றத்தை மத்திய அரசு லாபமில்லை என்று சொல்லி மறுத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குநர் குழு இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 15 சதவிகித ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் தரலாம் என்றும், அதற்காக அரசாங்கம் எந்த ஒரு நிதியும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தரவேண்டியதில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளது. பிஎஸ்என்எல்-லின் சொந்த நிதியிலிருந்தே இவர்களுக்கு ஊதிய மாற்றம் தர முடியும் என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவே கூறிய பின்னரும் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 1.85 லட்சம் ஊழியர்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் அரசுத்துறை ஊழியர்களாக பணியில் நுழைந்து அரசின் கொள்கை முடிவின் காரணமாக இன்று பொதுத்துறை ஊழியர்களாக மாறியுள்ளனர். இந்த நிறுவனத்தை பல மட்டங்களில் தலைமை தாங்கும் அதிகாரிகளில் பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைய தயாரில்லை என்று கூறி அரசு ஊழியர்களாகவே தொடர்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் முழுமையாக அமலாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் மறுப்பது நியாயமில்லை என அந்த ஊழியர்களும், அதிகாரிகளும் கொந்தளிப்பில் உள்ளனர்.
அரசு மறுப்பதற்கான காரணம்
பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகள் கழித்த பின்னரும் இந்த பொதுத்துறை நிறுவனத்தை சீரழிக்க அரசுகள் எடுத்து வந்த அனைத்து முயற்சிகளையும் ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை நடத்தி தடுத்து இந்த நிறுவனத்தை பொது மக்களுக்கு பயன்தரும் நிறுவனமாக நிலைநிறுத்தி வருகின்றனர். எனவே அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மன நிலையை சீர்குலைக்கவே அரசாங்கம் அவர்களுக்கான ஊதிய மாற்றத்தை மறுத்து வருகிறது.
துணை டவர் நிறுவனம்
மொபைல் சேவையின் வளர்ச்சிக்கு அதிமுக்கிய காரணம் அதன் மொபைல் டவர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ள 66,000க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து தனியாக பிரித்தெடுத்து ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதில் பணியாற்றுவதற்கான ஊழியர்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்தே எடுக்கப்படும் என்றும் அதனை பராமரிப்பதும் பிஎஸ்என்எல்-தான் என்றும் அரசாங்கம் கூறுகிறது. பின்னர் எதற்காக அதனை தனியான ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டும்? புத்தாக்கத்தை நோக்கி திரும்பியுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடைய செய்வதற்கான முயற்சியே தவிர வேறு ஏதும் இல்லை. மொபைல் டவர்களை தனியாக பிரித்த பின்னர் பிஎஸ்என்எல்லின் புத்தாக்கம் ஒட்டுமொத்தமாக தடைபடும். பின்னர் நலிவடைந்த நிறுவனம் என்ற பெயரைச் சொல்லி இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்