பரிவு அடிப்படையில் பணி நியமனம் கோரி ஆகஸ்ட் 2012 வரை நிலுவையில் உள்ளவைகளை "ஹை பவர் கமிட்டி" இறுதி முடிவு செய்து விட்டதாக பொது மேலாளர் (ESTT ) அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களிடம் தெரிவித்து உள்ளார் .
பிஎஸ்என்எல் ஸ்போர்ட்ஸ் போர்டு கூட்டத்தை 2012 இல் இருந்து நடை பெறாமல் உள்ளதை நமது துணை பொது செயலர் சுட்டி காட்டி உள்ளார் .பொது மேலாளர் (ADMN ) அவர்கள் கூட்டத்தை நடத்த உறுதி அளித்துள்ளார் .
78.2 % IDA இணைப்பு பென்ஷன்தாரர்களுக்கு வழங்க பட வேண்டும் என வலியுறுத்தி நமது தலைவர் தோழர் V A N .நம்பூதிரி அவர்கள் புதிதாக வந்துள்ள DOT இணை உறுப்பினர் Ms. Annie Moraes அவர்களை சந்தித்து உள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக