அமெரிக்க அரசு முடங்கியதால் என்ன என்ன பாதிப்புக்கள் ஒரு சிறப்பு பார்வை
அமெரிக்க
அரசு முடங்கி இன்றோடு 10 நாட்கள் ஆகப் போகிறது. நாட்டின் அரசாங்கமே
அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது. ஒவ்வொரு நாள் முடியும் போதும் ஏதாவது ஒரு
சேவை செயலிழப்பதைப் பார்த்து வருகிறார்கள் மக்கள். ஆரம்பத்தில் இது சில
நாட்களுக்குத்தான் என்ற நினைப்பிலிருந்தவர்கள், ஒரு வாரத்தைத் தாண்டியதுமே
பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து வருகிறார்கள். ஆபத்துக்காலத்தில்
மக்களுக்கு உதவ இயங்கும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் கூட, அரசுத்
தரப்பிலிருந்து வரவேண்டிய நிதியுதவி இல்லாத காரணத்தால் முடங்கிப் போயுள்ளன.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோட
ஆரம்பித்துள்ளன. அரசின் ஆராய்ச்சிக் கூடங்கள் படிப்படியாக மூடப்பட்டு
வருகின்றன. அமெரிக்காவின் மிக முக்கியமான அமைப்பு, வானியல் ஆய்வு மையம்.
எங்கே எப்படிப்பட்ட புயல் தாக்கப் போகிறது என்பதை தெளிவாகக் கணித்து
ஆபத்தைக் குறைக்கும் இந்த அமைப்பும் இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த
நேரத்தில் புயல் தாக்கினால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யக் கூட
வழியில்லை என அந்த அமைப்பின் தலைவர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
சம்பளமில்லாதால் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் திண்டாடுகின்றன. அன்றாட
செலவுகளைச் சமாளிக்க முடியாமல் புலம்ப ஆரம்பித்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக