ஒப்பந்த ஊழியர் 5 வது மாநில மாநாடு இன்று நாகர்கோயிலில் கோலாகலமாக தொடங்கியது. 527 சார்பாளர்கள்
கலந்து கொண்டுள்ளனர். தேசிய கொடியை முன்னாள் மக்களவை உறுப்பினர்
பெல்லார்மின் ஏற்றி வைக்க சங்கக்கொடியை மாணிக்கமூர்த்தி
ஏற்றினார்.வரவேற்புரையை தோழர் பெல்லார்மின் மற்றும்
தோழர் நாராயணசாமி நிகழ்த்த தியாகிகள் அஞ்சலிக்குப்பின் நமது
பொதுச்செயலர் தோழர் அபிமன்யு மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார். பொதுச்செயலர் தன் உரையில் ஒப்பந்த ஊழியர் சங்கம் உருவாவதிற்கும் அதன் வளர்சிக்கும் பல கோரிக்கைகள் வெற்றிக்கும் BSNLEU சங்கத்தின் பங்களிப்பை சுட்டிச்காட்டினார். நமது தலைமைப் பொது மேலாளர் திரு மொகமது அஷ்ரப் கான் பேசும்
போது ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் திறமைகளை வளர்க்க வேண்டும் என கூறினார்.
நாகர்கோயில் பொது மேலாளர் திரு திருநாவுக்கரசு அவர்களும்
உரையாற்றினார்கள்.
செய்தி படிக்க:CLICK HERE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக