திங்கள், 25 நவம்பர், 2013

சோமாலியாவில் கடும் பஞ்சம்:

 சோமாலியாவில் கடும் பஞ்சம்: பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம்--------

ஒரு நாடே வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது.இறப்பு எண்ணிக்கையும் இலட்சத்தை தாண்டி விட்டது ..ஆனாலும் இதை பற்றி எந்தவித செய்தியையும் பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது...ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள் என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலக நாடுகளும் நினைக்கவில்லை போலும்..ஈதியோப்பாவின் ,சோமாலியாவின் வறுமை என்பது ஏதோ நிலையான் ஆட்சி இன்மை மற்றும் ஆயுதங்களால் தான் என்று நாம் தினம் தினம் பேசுகின்றோம் ஆனால் நாம் அனைவரும் மறந்த மற்றும் பத்திரிக்கைகள் மறைத்த செய்தி என்னவென்றால் அங்குள்ள பசி பஞ்சத்திற்கும் ஆயுத கலாச்சாரத்திற்க்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தான் காரணம் என்ற உண்மையை..காரணம் அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையிட அணு ஆயுத கழிவுகளை கொட்ட அவர்களின் கடற்பரப்பை பயன்படுத்த என அணைத்து அக்கிரமங்களும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளால் நிகழ்த்தப்பட்டு வருவது தான் வேதனை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக