நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிஎஸ்என்எல் 3ஆம் மற்றும் 4ஆம் பிரிவு ஊழியர்களின் 30 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ.27 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்நடைபெறவுள்ளது.இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதாகக் கூறி நிர்வாகம் ஊழியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாககுறைந்தபட்ச போனசை அளிக்க மறுத்துவிட்டது.மருத்துவ அலவன்ஸ், எல்டிசி வசதிகளையும் நிறுத்திவிட்டது.இப்பொதுத்துறை நஷ்டமடையக் காரணம் ஊழியர்கள் அல்ல. கிராமப்புற தொலைபேசி சேவையை அளிப்பதற்குபிஎஸ்என்எல் க்கு ஏற்படும் ஆண்டுச் செலவு ரூ.10,000 கோடியாகும். இதனை ஈடுகட்ட ஆண்டுதோறும் ரூ.5000கோடியை 2005 வரை அளித்துவந்த மத்திய அரசு தற்போது அதனை முழுமையாக நிறுத்திவிட்டது. தரைவழிதொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகளை விஸ்திரிக்கவும் பராமரிக்கவும்தேவையான உபகரணங்களையும், நிதிஉதவியையும் அளிக்காமல் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து அரசுவஞ்சிக்கிறது.சேவையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களை எச்.யு.ஏ.டபிள்யு.எ.ஐ என்ற சீனநிறுவனத்திடமிருந்து நவீன கருவிகளை வாங்கிக்கொள்ள அனுமதிக்கும் அரசு, அத்தகைய கருவிகளைபிஎஸ்என்எல் வாங்குவதற்கு அனுமதி மறுப்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் நிறுவனம்தள்ளாடுகிறது.இச்சூழ்நிலையில் நான்காம்பிரிவு ஊழியர்களது சம்பள தேக்கம் கருணைஅடிப்படையிலானவேலை, எஸ்.எஸ்டி ஊழியர்களுக்கான சலுகைகள், பதவி உயர்வுகள், புதிதாக வேலைக்கு சேர்ந்தோருக்கானசம்பள முரண்பாடு பழைய ஊழியர்களுக்கான மற்றும் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட நியாயமானகோரிக்கைகளை தீர்க்கும்படி பிஎஸ்என்எல் தலைவருக்கு 26.05.2014 அன்று கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில்மனு அளிக்கப்பட்டு பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னணியில் 27.06.2014 அன்று நடந்தபேச்சுவார்த்தையில் சில பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க நிர்வாகம்ஒப்புக்கொண்டது.ஆனாலும் இன்றுவரைஅவை அமலாகவில்லை.
ஆகவே, கூட்டு நடவடிக்கைக்குழு 27.11.2014 அன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.அதன்படிநாடு முழுவதும் இவ்வேலை நிறுத்தம் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் பணிபுரியும்1,86,000 ஊழியர்களும் இப்போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக