புதன், 1 ஜூலை, 2015

ஆர்ப்பாட்டம்

நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியைகருப்பு தினம்என கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டல்ஹௌசி மத்திய செயற்குழு  விடுத்த அறைகூவலின்படி ஈரோடு  DE EXTNL  அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் தோழர். காளிமுத்து தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலர். தோழர். மணியன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலர். எல்.பரமேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் விளக்கி பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக