வியாழன், 5 அக்டோபர், 2017

மத்திய சங்கங்களின் செய்திகள் -04-10-2017 –நியுடெல்லி



மத்திய சங்கங்களின் செய்திகள்  -04-10-2017 –நியுடெல்லி
அனைத்து  BSNL ஊழியர் சங்கங்கள்/கூட்டமைப்புகளின்
ஏகோபித்த முடிவுகள் விபரம்
1)இனி அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் /கூட்டமைப்புகள் “ALL UNIONS and ASSOCIATIONS OF BSNL” என்ற பதாகையின் கீழ்செயல்பட்டு,பொதுப்பிரச்சனைகளான சம்பள உடன்பாடு , துணைடவர் நிறுவனம் அமைவதை தடுப்பது போன்ற பிரச்சனைகளுக்காக போராடும்
2)அனைத்து பொதுச்செயலர்கள் விரைவில் நிர்வாகத்திற்கு போராட்ட அறைகூவலை ஒன்றுபட்டு வெளியிடுவார்கள்
3)கீழ்க்கண்ட பிரச்சனைகள் உடனடி தீர்வுக்காக போராட்ட கோரிக்கையாக கண்டறியப்பட்டுள்ள
v  01-01-2017 முதல் சம்பள மாற்றம் மற்றும் 2 வது ஊதிய உடன்பாட்டில் தீர்க்கபடாமல் உள்ள நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள்
v  துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்துவது
4) கீழ்க்கண்ட போராட்ட திட்டங்கள் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
அ)16-10-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆ)16-11-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு மனிதசங்கிலி  இயக்கம்
இ)15-11-0271 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தல்
ஈ)12,13-12-2017 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம்
உ)காலவரையற்ற வேலை நிறுத்தம்- தேதி பின்னர் அறிவிக்கப்படும்

5) அடுத்த கூட்டம் 23-10-2017 அன்று நடைபெறும்
பொறுத்த்து போதும் !                             பொங்கி எழுவோம்!
புனலாய் எழுவோம் !          கனலாய் சுடுவோம்!      சந்தித்தோம்-சாதிப்போம்
போராட்டகளத்திற்கு தயாரோம் என
எல்.பரமேஸ்வரன்
மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக