திங்கள், 25 டிசம்பர், 2017

வெண்மணி தியாகிகள் தினம்

ஆறிடுமா
இல்லை அணைந்திடுமா
உங்கள் மேலிட்ட தீ
எப்படி எரிந்து போயிருக்கும்
உங்கள் உடல்கள்
அடங்கக்கூடியவையா
உங்கள் குரல்கள்
மறந்துவிடுமா
உங்கள் நினைவுகள்…….
ஆண்டுகள் பல ஆனாலும்
சாதியின் கொடுங்கரங்கள்
வர்க்கத்தோடு பிண்ணிப்பிணைந்து
படர்ந்து கொண்டிருக்கின்றன
இல்லை விடமாட்டோம்
அவை அழிய விடமாட்டோம்
தீயின் நாக்குகள்
உங்களின் மேல் சுட்டதை விட
இன்னும் அதிகமாய்
எங்களுள் கனன்று கொண்டிருக்கிறது
வெண்மணி தியாகிகளே
உங்கள் நினைவுகளை சுமந்து
வர்க்கப்போரை வாளாய் ஏந்தி
களத்தில் நிற்கிறோம்
முதலாளித்துவத்தை, நிலப்பிரபுத்துவத்தை
பார்ப்பனீயத்தை,
மறுகாலனியை வீழ்த்தாது
வீழாது எங்கள் தலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக