ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

AUAB பரிசீலனை கூட்டம் நடைபெற்றது- வேலை நிறுத்தத்தில் செல்ல முடிவு....

16.02.2019 அன்று AUAB கூட்டம் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, BSNL MS, ATM, TEPU, மற்றும் BSNL OA ஆகிய சங்கங்களின் பொது செயலாளர்களும், மற்றும் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களுக்கு அந்தக் கூட்டம் தனது அஞ்சலியை தெரிவித்துக் கொண்டது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுள்ள போராட்ட தயாரிப்பு பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது வரை AUABயுடன் DoT பேச்சு வார்த்தை நடத்தாதது தொடர்பாக அந்தக் கூட்டம் விவாதித்து தனது வருத்தத்தை பதிவு செய்தது. ஒரு விரிவான விவாதத்திற்கு பின் வேலை நிறுத்தத்தில் செல்வது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தின் கடைசி கட்ட பணிகள் தொடர்பாக விரிவாக செயல்பட வேண்டும் என மாநில மற்றும் மாவட்ட சங்கங்களை அந்தக் கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. அதே போல தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்த 40 CRPF ஜவான்களின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் 18.02.2019 அன்று காலை 10.00 மணிக்கு அனைத்து அலுவலகங்களிலும் அஞ்சலிக் கூட்டங்களை நடத்த வேண்டும் என AUAB அறைகூவல் விட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக