பணி ஒய்வுகாலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
1) தோழர்.
K. தியாகராஜன் SSS, HEAD
Clerk, O/o GMT, BSNL, ஈரோடு
38 ஆண்டுகள் இலாகவில்
பணியாற்றி உள்ளார். பொது மேலாளர் அலுவலக கிளையின் தலைவராகவும், மாநில ஊழியர் சேம நல வாரிய உறுப்பினராகவும் சிறப்பாக
பணிபுரிந்துள்ளார். சங்கம் கொடுத்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றதுடன் , பிற ஊழியர்களையும் பங்கேற்க வைத்துள்ளார்.
அலுவலக பணிகளையும் மிகச்சிறப்பாக செய்து அதிகாரிகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இவர் கடந்த 31-07-2013 அன்று பணி ஒய்வு பெற்றார்.
அகில இந்திய / மாநில /மாவட்ட / கிளைச்சங்கங்களுக்கு தலா ரூ.500 /- வீதம் நன்கொடை
அளித்துள்ளார். அவரின் பணி ஒய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
1 2) தோழர்.
M.சிவானந்தம் TM, O/o DE EXTERNAL , ஈரோடு
இவர் இலாகாவில்
36 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். நான்காம் பிரிவு ஊழியராக இலாகாவில் நுழைந்து , ஒயர்மேன், டெலிகாம் மெக்கானிக் ஆகிய தேர்வில் பதவி
உயர்வு பெற்று உள்ளார். இலாகாவில் நுழைந்தது முதல் பணி ஒய்வு பெறுகின்ற வரை தன்னை தோழர்.கே.ஜி.போஸ்
அணியில் இணைத்துக்கொண்டு , சங்க வளார்ச்சிக்காகவும் , இடது சாரிகளின் கருத்துக்களாலும்
ஈர்க்கப்பட்டு , அவர்கணின் தியாகத்தை பார்த்து தன்னையும் அந்த கருத்துக்கு மாற்றிக்கொண்டு பணியாற்றி உள்ளார். அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார்.
அகில அகில இந்திய / மாநில /மாவட்ட / கிளைச்சங்கங்களுக்கு தலா ரூ.500 /- வீதம் நன்கொடை
அளித்துள்ளார். அவரின் பணி ஒய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
1)
தோழர். P.M.
நல்லாசிவம்
STS (O), O/o DE INTERNAL, ஈரோடு
1978-ல் லைமேன்
ஆக இலாகாவில் நுழைந்தார். 09-05-1983 ல் தொலைபேசி இயக்குனராக பதவி உயர்வு பெற்று ,
ஊட்டி, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் பணிபுரிந்துள்ளார். நுழைந்த நாள் முதல் கே.ஜி.போஸ் அணியின் தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். அதற்கு முக்கிய காரணாம் அண்ணன், அண்ணி , மைத்துனர்கள்
என அவரது முழு குடும்பமே இடது சாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்வர்கள்.
அவர் கடந்த 31-10-2013 அன்று பணி ஓய்வு பெற்றுள்ளார். அகில அகில இந்திய / மாநில / மாவட்ட
/ கிளைச்சங்கங்களுக்கு தலா ரூ.500 /- வீதம் நன்கொடை அளித்துள்ளார். அவரின் பணி ஒய்வுக்காலம்
சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக