வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

வரலாற்றில் இன்று

பிப்ரவரி   7
  • 1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.
  • 1827 - பல்லக்குத் தூக்கிகள் தூரத்திற்கு ஏற்ற கூலி கோரி இந்தியாவில் முதல் வேலை நிறுத்த நாள்
  • 1845 - Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.
  • 1922 - De Witt, Lila Acheson என்ற இருவர் வெளியிட்ட Reader"s Digest மாத இதழ் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுவதும் ரசித்து வாசிக்கப்படும் இதழாக உருவெடுத்துள்ளது.
  • 1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
  • 1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
  • 1979 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
  • 1984 - விண்வெளி வீரர்களான Bruce Mc Candles ம் Robest L Stewart ம் விண்ணில் நடந்து சாதனை படைத்தனர். தங்கள் விண்கலத்துடன் எந்தவித இணைப்பும் இல்லாமல் அவர்கள் விண்ணில் உலா வந்தனர்.
  • 1986 - எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.
  • 1999 - உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக