வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

பி.எப். ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரம்

ஏ.கே. பத்மநாபன், தலைவர், சிஐடியு

1995 முதற்கொண்டு அமலில் உள்ளதொழிலாளர் வைப்புநிதி ஓய்வூதிய (ஞநளேiடிn கசடிஅ நுஅயீடடிலநநள ஞசடிஎனைநவே குரனே)த் திட்டத்தில் குறைந்தபட்சம் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக வழங்குவது என மத் திய அரசு முடிவு செய்துள்ளது. இது வரும்2014 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதேபோன்று வருங்கால வைப்பு நிதித் திட்டம் அமலாவதற்கான ஊதிய உச்சவரம்பும் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டுகளாக மத்தியத் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.
மேலும் வருங்கால வைப்புநிதித்திட்டத்தின் கீழான ஓய்வூதியர்களின் அமைப்புகளும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. தற்போது 44 லட்சம் ஓய்வூதியர்களில் 27 லட்சம் பேர் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். கேலிக்கூத்தான முறையில் வெறும் இரண்டு ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறவர்களும் கூட உண்டு. ஆதரவற்ற முதியோர்களுக்கு பல மாநில அரசுகள் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்குகின்றன. இந்த நிலையில்தான் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியத் தொகையை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்கிற போராட்டம் தீவிரம் அடைந்தது. அதேபோன்று வருங்கால வைப்பு நிதித் திட்டம் அமலாவதற்கான ஊதிய உச்ச வரம்பு மாதம் ரூ.6,500 என்பதுதான் தற்போதைய நிலை. இதையும் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் மத்தியத் தொழிலாளர் துறை, தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கையை அங்கீகரித்து நிதியமைச்சகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இதற்கானப் பரிந்துரையை அனுப்பி வைத்தது. நீண்ட இடைவெளிக்குபிறகு, தற்போது இதுபற்றி முடிவு மேற்கொள்வது என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. பிப்ரவரி 5 அன்று வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் மத்திய டிரஸ்டிகள் குழுவின் கூட்டம் மத்தியத் தொழிலாளர் அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தலைமையில் நடைபெற்றது. சிஐடியுவின் சார்பில் டிரஸ்டியாக இருக்கும் ஏ.கே.பத்மநாபனும் இதில் கலந்து கொண்டார். தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் ஓய்வூதியம் பெறுவோரின் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது மற்றும் ஊதிய உச்சவரம்புத் தொகையை உயர்த்துவது ஆகியவற்றுக்கான கூட்டமாக இது கூட்டப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் இந்த இரண்டு முடிவுகளும் அங்கீகரிக்கப்பட்டு அரசின் இறுதி முடிவுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் இந்த இரு முடிவுகளை அமலாக்குவதற்கு பல நிபந்தனைகளை உருவாக்கியுள்ளது. அந்த நிபந்தனைகள் பற்றி கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. முதல் பிரச்சனையாக குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு என்பது தற்போது ஓராண்டிற்குத்தான் அமலாகும் என்றும், இதற்காக மத்திய அரசு பட்ஜெட்டில் 1217 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யும் என்றும் தெரி விக்கப்பட்டது. ஓய்வூதியத்தை உயர்த்தும் முடிவு ஓராண்டுக்கு மட்டும்தான் என்பதை ஏற்கவே இயலாது என்று சிஐடியு உட்பட அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தினார்கள். மத்தியத் தொழிலாளர்துறை அமைச் சகமும் கூட ஓராண்டுக்கு மட்டும் என்ற முறையில் திருத்தம் கொண்டுவருவது சரியல்ல என்றும், ஓய்வூதியம் வழங்கப்பட்ட பிறகு, ரத்து செய்வது என்பது பெரும் சிரமங் களை ஏற்படுத்தும் என்றும்தான் கூறியது. மத்தியத் தொழிலாளர்துறை அமைச்சர் “இதைத் தொடர்ந்து வழங்குவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித் துள்ளார்.
அதேபோன்று, ஓய்வூதியம் கணக்கிடு வதற்கான ஊதியத்தை நிர்ணயிப்பதிலும் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களின் ஊதியத்தை சராசரியாகக் கணக்கிட்டு, ஓய்வூதியத்திற்கான மாத ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை கடைசி 60 மாதங்களுக்கென மாற்ற வேண்டும் என்பது நிதியமைச்சகத்தின் ஆலோசனையாகும். இதற்கும் கடுமையான ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 58 என்பதிலிருந்து 60ஆக உயர்த்த வேண்டும் எனவும் நிதியமைச்சகம் கூறியிருந்தது. ஓய்வு பெறும் வயது 58ஆக இருக்கும்வரை ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை உயர்த் துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. மேலும் ஊதிய உச்சவரம்பை மாதம் 14,500 ரூபாய் என உயர்த்தும்போது அந்தத் தொகைக்கும் மேற்பட்டு ஊதியம் பெறுவோரை வருங்கால வைப்புநிதித் திட்டத்தின்கீழ் சேர்க்கக் கூடாது என்கிற ஆலோசனைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 1.16 சதவீதத் தொகையை 14,500 ரூபாய் வரையிலான ஊதியம் பெறுவோர் அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூடுதலாக ஊதியம் பெறுவோர், தாமாக முன்வந்து வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் உறுப்பினராகும் நிலை தற்போது உள்ளது.
இது மாற்றப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.ஒட்டுமொத்தத்தில் நடைமுறையில் இருக்கும் எந்த உரிமையையும் குறைப்பதற் கோ, மறுப்பதற்கோ அனுமதிக்க முடியாது என்று சிஐடியு சார்பில் வலியுறுத்திக் கூறப் பட்டது.மேலும், இந்த ஓய்வூதியத் திட்டம் துவங்கப்படும்போது, ஓய்வூதியத்தில் மூன் றில் ஒரு பகுதியைத் தொகுத்துப் பெறுதல் (உடிஅஅரவயவiடிn டிக யீநளேiடிn) என்னும் அடிப்படையில், 100 மாதங்களுக்கான தொகையை ரொக்கமாகப் பெறும் முறை நடை முறையில் இருந்தது. இது எவ்விதக் கலந்தாலோசனையுமின்றி இடையே ரத்து செய்யப்பட்டது. ஆனால் இவ்வாறு தொகை பெற் றோர் பெருமளவில் ஏமாற்றப்படும் நிலை தற்போது உள்ளது. 100 மாதங்களுக்கான தொகையை ரொக்கமாகப் பெற்றவர்கள், நூறு மாதங்களுக்குப் பிறகும் தொடர்ச்சி யாக குறைக்கப்பட்ட ஓய்வூதியத் தொகை யைத்தான் பெற்று வருகிறார்கள். இந்த மோசடிக்கு முடிவுகட்ட வேண்டும் என சிஐடியு ஏற்கனவே வலி யுறுத்தி வந்தது. இந்தக் கொடுமைக்கு உடனடி யாக முடிவு கட்ட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு, மத்தியத் தொழிலாளர்துறை அமைச்சர் இதைப் பரிசீலிப்ப தாகவும் கூறியுள்ளார்.வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் அங்கம் வகிக்கும் டிரஸ்டிகளின் முடிவைமத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போதுதான், நிதியமைச்சக நிபந்தனைகள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது தெளிவாகும்.
இருப்பினும் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் ஒரு போராட்டத்தில் முதற்கட்ட வெற்றியைத் தொழிற்சங்க இயக்கம் பெற்றுள்ளது. மேலும் அனைவருக்கும் ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கும், விலைவாசி உயர்வுடன் இணைக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவதற்கும், ஒரு தலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்ட தொகுத்துப்பெறும் தொகையை (உடிஅஅரவயவiடிn டிக யீநளேiடிn) மீண்டும் பெறுவதற்கும் தொடர்ந்து போராட வேண்டி யுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக