திங்கள், 27 அக்டோபர், 2014

விழிப்புடன் இருப்போம்

விழிப்புடன் இருப்போம்
.  SSA- க்களை குறைத்து  AREA-அலுவலகங்களாக மாற்றுவது
  v   ஊழியர்களையும், ஊதியச் செலவையும் குறைப்பது,
v அதிகாரிகள் உட்பட அனைத்துப் பணியாளர்களையும் ஒப்பந்த முறையில் நியமிப்பது உள்ளிட்ட டெலாய்ட்டி கமிட்டியின் நாசகர  பரிந்துரைகளை, தொழிற்சங்கங்களின்ஆலோசனையையும் மீறி,  BSNL  நிர்வாகம் அமுல்படுத்தத் துவங்கியுள்ளது.
முதற்கட்டமாக,   முன்னோட்டு  திட்டமாக, மகாராஷ்டிரா  மாநிலத்தில், 30 SSA- க்களை 16 AREA அலுவலகங்களாக  குறைப்பதற்கான  உத்தரவை, BSNL  நிர்வாகம், 14.10.2014 அன்று பிறப்பித்துள்ளது.
இதனை  எதிர்த்து  போராட்ட திட்டத்தை முடிவு  செய்வதற்கு,  மஹாராஷ்டிர மாநில BSNLஅனைத்து சங்கங்களின் கூட்டம் 20.10.2014 அன்று நடைபெற்றது.  மஹாராஸ்டிரா மாநிலத்தில் "டெலைட் "பரிந்துரையின் அடிப்படையில் ஏரியா அலுவலகம் ஏற்படுத்துவதை  அனுமதிக்க முடியாது என அனைத்து தொழிற் சங்கங்கள் எடுத்த முடிவை கடிதமாக மஹாராஷ்டிரா CGM மிடம் கொடுத்து விவாதித்தனர். CGM அவர்கள்ஏரியா  அலுவலகம் அமைப்பதை அமல்படுத்த படாது என உறுதியளித்துள்ளார். இதனை நமது BSNLEU மஹாராஸ்டிரா மாநில செயலரும், FORUM கன்வீனருமான தோழர்.N.K.நளவாடா, நமது மத்திய சங்கத்திற்கு( CHQ ) தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டிலும் 17 SSA க்களை 10  AREA  அலுவலகங்களாக குறைக்க வேண்டும் என்பதுடெலாய்ட்டி கமிட்டியின் நாசகர பரிந்துரை.
தமிழ்நாட்டிலும் விழிப்புடன் இருப்போம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக