புதன், 14 ஜனவரி, 2015

சிம் கார்டு பற்றாக்குறை; ஒப்பந்த ஊழியருக்கு சம்பளம் இல்லை பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகவேல் மற்றும் அய்யாவு ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.பரமேஸ்வரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை விரோத கொள்கைகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக