பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!!
தையும் வந்தது விழாவும் வந்தது
கொண்டாடுவதற்காக!
அறுவடை வந்தது வளமும் வந்தது
தமிழருக்காக!! (பொங்கலோ பொங்கல்)
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!!
தையும் வந்தது விழாவும் வந்தது
கொண்டாடுவதற்காக!
அறுவடை வந்தது வளமும் வந்தது
தமிழருக்காக!! (பொங்கலோ பொங்கல்)
முதல் நாளில் போகிப் பண்டிகை
சுகத்திற்காக!
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வளத்திற்காக!! (பொங்கலோ பொங்கல்)
சுகத்திற்காக!
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வளத்திற்காக!! (பொங்கலோ பொங்கல்)
இரண்டாம் நாளில் பொங்கலோ பொங்கல்
வணங்குவதற்காக!
சூரியனை வணங்கி பொங்கல் வைத்து
மகிழ்வதற்காக!! (பொங்கலோ பொங்கல்)
வணங்குவதற்காக!
சூரியனை வணங்கி பொங்கல் வைத்து
மகிழ்வதற்காக!! (பொங்கலோ பொங்கல்)
மூன்றாம் நாளில் மாட்டுப் பொங்கல்
போற்றுவதற்காக!
மஞ்சினை விரட்டி இளரத்த வீரத்தைக்
காட்டுவதற்காக!! (பொங்கலோ பொங்கல்)
போற்றுவதற்காக!
மஞ்சினை விரட்டி இளரத்த வீரத்தைக்
காட்டுவதற்காக!! (பொங்கலோ பொங்கல்)
நான்காம் நாளில் காணும் பொங்கல்
மனமகிழ்விற்காக!
சுற்றத்தாரைக் கண்டு நலம் விசாரித்து
பேணுவதற்காக!! (பொங்கலோ பொங்கல்)
மனமகிழ்விற்காக!
சுற்றத்தாரைக் கண்டு நலம் விசாரித்து
பேணுவதற்காக!! (பொங்கலோ பொங்கல்)
இன்று நான் இங்கே வந்தது
வாழ்த்துவதற்காக!
மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்தைக்
கூறுவதற்காக!! (பொங்கலோ பொங்கல்)
வாழ்த்துவதற்காக!
மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்தைக்
கூறுவதற்காக!! (பொங்கலோ பொங்கல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக