வியாழன், 8 ஜனவரி, 2015

கோல் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்படாது என மத்திய அரசு உறுதி - இருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்ததையடுத்து, கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து, சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த இருநாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால், நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதனிடையே, மத்திய அமைச்சர் திரு. கோயலுடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராடி வெற்றி பெற்ற தோழர்களுக்கு பாராட்டுக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக