வியாழன், 8 ஜனவரி, 2015

தாராபுரத்தின் மூன்றாம் நாள் தர்ணா


மத்திய, மாநில அரசுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் அண்ணாசிலை முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் சார்பில் தர்ணாபோராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் சங்ககூட்டமைப்பு நிர்வாகிகளான எம்.நாச்சிமுத்து, ஆர்.லோகநாதன், சி.பாலகிருஷ்ணன், பி.செல்லமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.
மேலும் எஸ்.செல்வராஜ் வரவேற்றார். கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் எல்.பரமேஸ்வரன் துவக்கவுரையாற்றினார். மேலும் இந்த போராட்டத்தில் பிபிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கவேண்டும். மேலும் முன்னேற்றம் விரிவாக்கம் மற்றும் சிறந்த சேவைகளை தருவதற்கு தேவையான கருவிகளை உடனடியாக வாங்க வேண்டும்.பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் இணைக்கும் முடிவினை கைவிடவேண்டும்.
மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவது என்பதை கட்டாயமாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கண்ணுச்சாமி, டி.பி.பழனிச்சாமி, ஜி.குமார்,வி.மணியன், எஸ்.அய்யாச்சாமி, என்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் என்.புண்ணியகோடி நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக