செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் : அன்றே சொன்னது தீக்கதிர்

2ஜி அலைக்கற்றை வரிசை ஊழல் தொடர்பாக கார்ப்பரேட் தரகர் நீரா ராடியா டேப் வெளியானது. தற்போது தமிழக உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் தனி உதவியாளர் சண்முக நாதன், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருடன் நடத்திய உரையாடல் அடங்கிய டேப் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த டேப்பை வெளியிட்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை வரிசை ஊழலை முதன்முதலாக அம்பலப்படுத்தியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., ஆவார். தீக்கதிர் நாளேடு இந்த ஊழல் தொடர்பாக விரிவாகவும், தொடர்ச்சியாகவும் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது.ஜாபர் சேட், கனிமொழியுடன் நடத்திய உரையாடலில் தீக்கதிரில் வெளிவந்த ஒரு செய்தி தொடர்பாக பேசியுள்ளனர்.
அவர்களது உரையாடலில் மூன்று இடங்களில் தீக்கதிர் செய்தி குறித்து பேசியுள்ளனர். தீக்கதிரில் 15.2.2011 அன்று வெளியான செய்தி குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் கேட்டதாக ஜாபர் சேட் கூறுகிறார். ஆமாம். நேற்றைக்கு வந்த கட்டுரை தானே என்று கனிமொழி கேட்கிறார். (உரையாடல் பதிவான தேதி 16.2.2011) செய்தியில் இடம்பெற்றுள்ள விபரங்களை தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று தலைவர் (கலைஞர்) கேட்ட தாக ஜாபர் சேட் கூறுகிறார்.
டாட்டாவின் வோல்டாஸ் கட்டிடம் கைமாறியது குறித்து தீக்கதிர் 15.2.2011 அன்று வெளியான செய்தியில் (பக்கம் 3) கூறப்பட்டிருந்தது. இந்த டேப் பொய் என்று திமுக தலைவர் கருணாநிதி ஒரே வரியில் மறுத்திருக்கிறார். இதுகுறித்து சிபிஐ விசார ணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைவரிசைக் கற்றை ஊழல் தொடர்பாக தீக்கதிர் அன்றே அம்பலப்படுத்தியதை இந்த டேப் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. (உரையாடலின் தமிழ் மொழி பெயர்ப்பை முழுமையாக பார்க்க றறற.அயயவசர.உடிஅ இணைய இதழை காண்க).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக