வரலாற்றில் இன்று
- உலக நோயாளிகள் நாள்
- கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.
- 1659 - சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.
- 1752 - அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
- 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.
- 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
- 1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
- 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1990 - தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராகப்
போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டே (Nelson Mandela)
விடுதலை செய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற
திரு. மாண்டேலா அடுத்த ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவின் முதல் பல இன
தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார்.
- 1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக