வியாழன், 6 நவம்பர், 2014

அகில இந்திய மாநாடு - முதல்நாள்

06.11.14 கொல்கொத்தாவில் BSNLEU-AIC தொடங்கியது...

BSNLEUவின் 7 ஆவது அகில இந்திய மாநாடு அகில இந்தியத் தலைவர் தோழர் வி..என்நம்பூதிரி அவர்கள் தலைமையில் கொடியேற்றம் மற்றும் அஞ்சலியுடன் தொடங்கியதுவரவேற்புக் குழு தலைவர் தோழர் சிசில் பட்டாச்சார்யாவின் வரவேற்புரையைத் தொடர்ந்து சிஐடியுவின் அகில இநதிய பொதுச் செயலர் தோழர் .கே.பத்மநாபன்தொடக்கஉரையாற்றினார்.
                
பொதுச் செயலாளர் தோழர் அபிமய்னயுவின் எழுச்சியான தொடக்க உரையுடன் மாநாட்டின் முதல்நாள் தொடங்கியதுதபால் தந்தித் துறையின் தொழிற்சங்கத்திலிருந்து அதன் பொதுச் செயலாளர் தோழர் கிருஷ்ணன் மற்றும் அனைத்திந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் ரமேஷ் ஆகியோரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து தோழர் மோனி போஸ் குறித்த நூல் ஒன்று வெளியிடப்பட்டதுஅதனை திருமதி மோனிபோஸ்அவர்கள் பெற்றுக்கொண்டார்நமது துணைப் பொதுச் செயலர் தோழர் அனிமேஷ் மிஷ்ராஅவர்காள் காலை நிகழ்வுக்கு நன்றி கூறி முடித்து.
              
பிற்பகல் நடைபெறுவதாக இருந்த பேரணிக்கு வழக்கமான காரணங்களைக்கூறி அரசாங்கம் அனுமதி தர மறுத்ததால்பொது அரங்காக கல்கத்தா அலியூர் டெலிகம் பேக்டரிக்கு முன்னால் பொதுஅரங்கம் நடைபெற்றதுபொது அரங்கில் தோழர் சக்ரவர்த்தி மற்றும்பாராளுமன்ற உறுப்பினர் தபன் ஷேன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.








..

ஹௌராவில் நமது BSNLEU அகில இந்திய மாநாட்டை துவக்கிவைத்து CITU வின் அகில இந்திய தலைவர் தோழர்.A.K.பத்மநாபன் உரை நிகழ்த்துகிறார்.
BSNLEU-7வது அகிலஇந்திய மாநாட்டு அரங்க மேடையில் தலைவர்கள் காட்சி..

மாநாட்டு பொது அரங்கு மேடையும் - தோழர்.தபன் அவர்களின் உரையும் 

மாநாட்டு பொது அரங்கில் பங்கு பெற்றவர்களின் ஒரு பகுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக